
ஆந்திராவில் நிலநடுக்கம்
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் பல்நாடு பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வினுகொண்டாவிலிருந்து வடமேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
திடீர் அதிர்வால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES India

