ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவில் அமைந்துள்ள சரபெட்சு நகரத்திற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், 81 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )