
இஸ்ரேலியத் தாக்குதலில் லெபனானில் 14 பேர் உயிரிழப்பு
போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் , இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி, லெபனானின் ஏழு நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த மோதல்களில் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது நாட்டினதும் படையினரதும் பாதுகாப்பிற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறிச் செயல்பட்டால், தாங்களும் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என ஹிஸ்புல்லா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

