
சட்டவிரோத மதுபானம் பறிமுதல் ; இருவர் கைது
வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (26) மாலை பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரடைஸ்வத்த மற்றும் திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூனகஹ பகுதிகளில் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் தூனகஹ மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 48 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

