யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை விற்பனை: மருந்து பிரதிநிதிகள் உட்பட 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை விற்பனை: மருந்து பிரதிநிதிகள் உட்பட 6 பேர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்றதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 60 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 06 பேரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மருந்து விற்பனை பிரதிநிதிகள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )