
அமைதிக்கான நடைப்பயணத்திற்காக இன்று கொழும்பின் பல வீதிகளில் 11:00 மணிமுதல் போக்குவரத்து மட்டுப்படும்
அமைதிக்கான நடைபயணம் (Walk for Peace) இன்று இறுதி நாளாக கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
இதையொட்டி இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) மாலை 04.00 மணிக்கு சுதந்திர சதுக்க வளாகத்தில் இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
இன்று முற்பகல் 11.00 மணி முதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு பின்வரும் வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம்,
பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை.மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வார்ட் பிளேஸ் (Ward Place),சொய்சா சுற்றுவட்டம் மற்றும் லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை , எஃப். ஆர். சேனநாயக்க மாவத்தை ,சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை ,ஹோர்டன் சுற்றுவட்டம் ,நந்தா மோட்டர்ஸ் சந்தி மற்றும் சுதந்திர மாவத்தை பிரேமசிறி கேமதாச மாவத்தை ,கேம்பிரிட்ஜ் பிளேஸ் கிளாஸ் ஹவுஸ் (Glass House) சந்தி, மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி ,பிளவர் வீதி (Flower Road) பித்தளை சந்தி (Pittala Junction) ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை முத்தையா வீதி பேபுரூக் வீதி (Baybrooke Street) ஸ்டேபில் வீதி (Staple Street) கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள் ஆகிய போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பு நகருக்குள் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அல்லது தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

