இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு

உலகளாவிய சந்தை நெருக்கடிகளுக்கு மத்தியில், லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி (LAUGFS Gas PLC) தனது எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

உலகளாவிய சந்தையில் எரிவாயு கொள்வனவில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 kg சிலிண்டர் 545 ரூபாயால் அதிகரித்து ரூ. 6245 ரூபாயாகவும்

5kg சிலிண்டர் 220ரூபாயால் அதிகரித்து 2,500 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது .

சவாலான உலகளாவிய சூழலிலும், இலங்கையிலுள்ள வீட்டு உபயோக, வர்த்தக மற்றும் கைத்தொழில் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி எரிவாயுவை வழங்குவதற்குத் தாங்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )