ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்தும் அமெரிக்கா – ஈரான் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும்-போர் நிறுத்தம் எட்டப்படுமா ?

ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்தும் அமெரிக்கா – ஈரான் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும்-போர் நிறுத்தம் எட்டப்படுமா ?

மூன்று அமெரிக்கப் போர்ப்பாப்பல்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தி, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்த USS Truxtun, USS Rafael Peralta மற்றும் USS Mason ஆகிய அமெரிக்கப் போர்ப்பாப்பல்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராணுவம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தமது தற்காப்புக்காகஈரானுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், ஈரானியத் தாக்குதல்களால் அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பின்படி, ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய ரகத் தாக்குதல் படகுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஈரான் பாதுகாப்புப் பிரிவினர் வெளியிட்ட தகவலில், ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைந்த தமது எண்ணெய் தாங்கி கப்பல் மற்றும் மற்றொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

மேலும், அமெரிக்கா பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் பதிலடித் தாக்குதல்கள், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் உளவுத் தகவல் செயல்பாட்டு மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள கெஷ்ம் தீவு உட்பட பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளில் பல பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கும் எதிரிப் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் பதற்றம் நிலவிய போதிலும், தரப்புகளுக்கிடையிலான போர்நிறுத்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )