
யாழில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றுள்ளனர்.
அந்த வேளையில், தனது கையில் வைத்திருந்த ஐஸ் போதைப் பொருள் அடங்கிய ஒரு பொட்டலத்தை குறித்த இளைஞர் திடீரென விழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவரிடமிருந்த மற்றொரு ஐஸ் பொட்டலத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் உடல்நலக்குறைவால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

