நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 909 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 909 பேர் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை (15) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 909 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை 914  விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் 03 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )