
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
அலுபோமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவத்த பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஹொரணை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (21) மதியம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

