
மன்னாரில் நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதிவிபத்து , பலர் காயம்
மன்னார் கள்ளியடி பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதியதில் பலர் காயமடைந்தனர்.
மன்னார்- யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது
மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றிச்செல்லும் குறித்த தனியார் பஸ்,
கள்ளியடி பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தபட்டபோது ,
வேக் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாக பயணித்த
கனரக வாகனம் குறித்த பஸ்ஸுடனும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது .
விபத்தில் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும்
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் கனரக வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரும் காயமடைந்தது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .
விபத்து தொடர்பில் இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

