ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் வியட்நாமிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் வியட்நாமிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் வியட்நாமிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதி எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நாட்டில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி லுங் சுங்கின் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு விஜயம் செய்கிறார்.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெறும் சர்வதேச வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகவும் கலந்து கொள்வதுடன் அங்கு முக்கிய உரையையும் நிகழ்த்துவார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல மூத்த இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.

மேலும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினரும் விஜயம் செயதுள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )