
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாக்களித்தார்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் மருதானை, பஞ்சிகாவத்தையில் உள்ள அபேசிங்காராம சய்கோஜி முன்பள்ளியில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வாக்களித்தார் .
ஜனாதிபதித் தேர்தலில் தாம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்த நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமைதியான ஜனநாயக சுதந்திரமானது , எதிர்காலத் தேர்தல்கள் அனைத்திலும் தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக வாக்களித்த பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார் .
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மக்கள் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய ஜனாதிபதி, இது இந்த நாட்டின் அரசியல் கலாசாரமாக மாற வேண்டும் என்றும் கூறினார்.
இந்த ஆண்டு 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

