
துசித ஹல்லொலுவ விளக்கமறியல்
2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லொலுவை ஜூன் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக துசித ஹல்லொலுவ எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

