கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஜூன் 16 ஆம் திகதி

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஜூன் 16 ஆம் திகதி

புதிதாகத் தெரிவான கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்ற அறிவிப்பு குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜெயசுந்தர இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

இதனைப்படையில் ஜூன் 16 ஆம் திகதி காலை 9.30 ற்கு கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு தொடங்க உள்ளது.

நகர மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில், புதிய மேயர் மற்றும் துணை மேயர் தெரிவு முதலில் இடம்பெறும் .

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய காட்சிகள் இரண்டும் மேயரைத் தேர்ந்தெடுக்க ஏனைய அரசியல் குழுக்களின் ஆதரவைக் கோரியுள்ளதாக அறிவித்துள்ளன.

இதேவேளை மேற்கு உள்ளூராட்சித் துறை ஆணையாளர் வெளியிட்ட வர்த்தமானிகிணங்க மேலும் 20 உள்ளூராட்சி சபைகளின் தொடக்க அமர்வு ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது .

கடந்த மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )