
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலை அனுப்ப வேண்டாம்
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்குமானால் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , ”டெங்கு, சிக்குன்குனியா அல்லது இன்ஃப்ளூயன்ஸா உள்ள பிள்ளைகள் பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைக்குச் சென்றால், அவர்கள் ஓடி குதித்து விளையாடும் போது மாரடைப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை கூட ஏற்படலாம்
குறித்த நோய்களார் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயற்கையான திரவ உணவை வழங்குவது மிகவும் முக்கியம். டெங்கு நோயாளிகளுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற உணவை வழங்க வேண்டாம்.
டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் கடினமாக உழைத்தால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம், மேலும் அவர்களின் உயிர்கள் கூட இழக்கப்படலாம்.
வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளும் அதிகமாகப் பதிவாவதாகவும், அத்தகைய குழந்தைகளுக்கு வறுத்த அரிசி கஞ்சி, உப்பு கஞ்சி, வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுப்பது முக்கியம்.” என தெரிவித்துள்ளார்.

