வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களின் 8 பேர் குழந்தைகள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமின் வட பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான ஹா லாங் விரிகுடாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் பயணித்த பெரும்பாலான பயணிகள் தலைநகர் ஹனோயிலிருந்து சென்ற வியட்நாமிய குடும்பங்கள் என வெளிநாட்டு ஊடக அறிக்கைககளில் கூறப்பட்டுள்ளது .

சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள கனமழை தடையாக இருப்பதாக மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

விபத்து ஏற்பட்டபோது படகில் 53 பேர் பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )