
???? Breaking News : ரணில் விக்கிரமசிங்கவின் அவசரகால விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது ; உயர் நீதிமன்றம்
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.

