யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )