ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை

ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று (31) பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வலானை குற்றத் தடுப்புப் பிரிவில் நேற்று (30) சரணடைந்திருந்த நிலையில் அவர் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )