தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு பிடியாணை

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு பிடியாணை

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பித்துள்ளதாக அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்ட தேர்தல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டதையடுத்து அவர் ஆஜர் ஆகாததால் யூன் சுக் இயோலுக்கு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிளாகியுள்ளன.

இவர் கடந்த ஆண்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக கூறி இராணுவ அவசர நிலையை அறிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் பதவி விலக கோரி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக அரசியலமைப்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )