மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பென் ஸ்டோக்ஸ்

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பென் ஸ்டோக்ஸ்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு பென் ஸ்டோக்ஸ் முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 141 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. பென் ஸ்டோக்ஸ், 4. வியான் முல்டர், 5. பற் கமின்ஸ்

மேற்கூறப்பட்ட போட்டியில் 54 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் றிஷப் பண்ட் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

இப்போட்டியில் 94 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் பென் டக்கெட், 15ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )