
மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கல்லடி கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஐயாத்துரை பத்மநாதன் என்பவரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் இருந்து ஆரையம்பதி வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்திருந்த நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

