
யானை தாக்கியதில் குடும்பஸ்தவர் ஒருவர் பலி
மட்டக்களப்பு வெல்லாவெளி கூழாவடி நெல்லிக்காட்டில் நேற்று (02) யானை தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லிக்காட்டு கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் இராமலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

