ஒரு வருடமாக வீதி விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படாது சாதனை படைத்த பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி

ஒரு வருடமாக வீதி விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படாது சாதனை படைத்த பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி

பின்லாந்து தலைநகர் (Helsinki )ஹெல்சின்கி 2024 ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை வரையான ஒரு வருட காலப்பகுதியில் வீதி விபத்துகளில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நகரம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ஹெல்சின்கி சுமார் 700,000 சனத்தொகை கொண்ட ஒரு நகரமாகும் .

ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் வீதி போக்குவரத்து இறப்புகளின் எண்ணிக்கை – 2024 இல் 3% குறைவடைந்தது வந்த போதிலும் பெரிய நகரங்களில் மோசமான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன .

இந்நிலையில் ஒரு பெரிய நகரத்தில் ,ஒரு வருடம் என்ற நீண்ட காலப்பகுதியில் வீதி போக்குவரத்து விபத்து இடம்பெறாதிருப்பது ஒரு விதிவிலக்கான சாதனையாகும்.

நகர்ப்புற சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த போக்குவரத்து பொறியாளர் ரோனி உட்ரியாய்னென் Roni Utriainen இந்த சாதனைக்கு “பல காரணிகள் உள்ளன, ஆனால் வேக வரம்புகள் மிக முக்கியமான ஒன்றாகும்” என்று கூறினார்.

ஒரு காரின் வேகம் மணிக்கு 40 இலிருந்து 30 கி.மீ ஆகக் குறைக்கப்படும்போது பாதசாரிகள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் பாதியாகக் குறைக்கப்படுகிறது .

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நகர அதிகாரிகள், 2021 இல் மத்திய ஹெல்சின்கி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வேக வரம்புகளை அறிமுகப்படுத்தினர்.

வீதி விபத்துகளில் இறப்பு மற்றும் காயங்களின் பூஜ்ஜிய அளவை அடைவதை நோக்கமாகக் கொண்ட “விஷன் ஜீரோ” என்ற தேசிய உத்தியின்படி 70 தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு கேமராக்களை நிறுவுவதன் மூலம் வீதிப் போக்குவரத்தில் புதுமைகள் செயல்படுத்தப்பட்டன,

இதனையடுத்து “விஷன் ஜீரோ” குறித்து போலீஸார் மேற்பார்வையை வலுப்படுத்தினர்.

இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நகரத்தில் வீதி விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )