
நுவெரேலியாவில் கடும் பனி மூட்டம் , விபத்து சம்பவம் பதிவுசாரதிகளுக்கு போலீசாரின் அவசர எச்சரிக்கை
தற்போது பனி மூட்டம் நிலவும் ,நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற சிறிய ரக லொறியே நானுஓயா பங்களாவத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது
விபத்தில் காயமடைந்த சரதியும் மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
நானுஓயா பொலிஸார் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகள் கவனமாக வாகனத்தை செலுத்துமாறும் ,குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துவதுடன் தங்களுக்கு உரிய பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

