அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

image

அமைச்சர் நானுஓயா ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பிரதான அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, திருத்தப் பணிகள், நவீனமயமாக்கல் மற்றும் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்தார்.

image

சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் நானுஓயாவிலிருந்து பதுளை செல்லும் ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகளை இணைத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புனரமைப்பது குறித்து அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

image

மேலும், ரயில் நிலைய பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகளின் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )