பொலன்னறுவை மாவட்டத்தின் கடுகெலியாவ வாவிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

பொலன்னறுவை மாவட்டத்தின் கடுகெலியாவ வாவிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர்ப்பாசனம் எமது உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கடுகெலியாவ வாவியைப் புனரமைக்கும் பணிகள் அண்மையில் (28) ஆரம்பிக்கப்பட்டன.

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்தவின் தலைமையில் இப்புனரமைப்புப் பணிகளுக்காக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் ஒரு கோடி பதினைந்து இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் நிதியை செலவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

May be an image of 9 people

25 வருடங்களுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் இந்த வாவி பல வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்படும் இந்த வாவி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் தமது செயற்பாடுகளின் போது கடும் கஷ்டமான நிலைமைக்கு ஆளாகினர். மூன்று மாத குறுகிய காலப்பகுதியினுள் இந்த வாவியில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வீடமைப்புப் பிரதி அமைச்சர் டி. பி. சரத், பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி மற்றும் பத்மசிறி பண்டார, விவசாய மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகள், பிரதேச விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )