
துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை நிராகரிகரித்தே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பயணித்த வாகனத்தின் மீது அண்மையில் நாரஹேன்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

