
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

