
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ; இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
போட்டியின் 6-வது நாளான இன்று (14) துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

