
சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்
சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
2016 – 2017 காலகட்டத்தில் அவரது அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவால் முன்னாள் அமைச்சர் அதுல குமார ராஹுபத்த நேற்று (17) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

