
40 தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை அதிகாரி கைது
40 தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 37 வயதான சந்தேகநபர் 550 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்களை இடுப்பில் மறைத்து மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் வழியாக கடத்த முயன்றதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

