
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
கம்பஹா, கணேமுல்ல, கெந்தலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கணேமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் குறித்த பெண்ணின் கணவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரது மனைவி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

