நிட்டம்புவவில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு                                      குடிபோதையில் இருந்த மூவர் கைது

நிட்டம்புவவில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு குடிபோதையில் இருந்த மூவர் கைது

நிட்டம்புவவில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்ற வேன் ஒன்றை போலீசார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இன்று அதிகாலை 1.15அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வேனில் பயணித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

கம்பஹாபொலிஸ் பிரிவின் மோட்டார் சைக்கிள் சோதனை பிரிவு பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு நிட்டம்புவ-கட்டுநாயக்க வீதி உதம்மிட்ட சந்தியில் வீதி சோதனை நடவைக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது வேயங்கொடையிலிருந்து நிட்டம்புவ நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றை நிறுத்துமாறு ,பொலிஸ் அதிகாரிகள் சைகை செய்தபோது, குறித்த ​​வேன் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அதிகாரிகள் வேனை துரத்திச் சென்று நிட்டம்புவ பகுதியில் வைத்து T-56 துப்பாக்கியால் வேனின் முன் பின் மற்றும் வலது டயர்களில் சுட்ட பின்னர். வேனில் இருந்த மூன்று பேரை கைதுசெய்தனர் .

வேனில் பயணித்த மூவரும் அதிக குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஓட்டுநர் லெல்லோபிட்டியவைச் சேர்ந்தவர் என்றும், ஏனையவர்கள் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட்டு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )