அதிக விலைக்கு கீரி சம்பா விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு 100000 ரூபாய் அபராதம்

அதிக விலைக்கு கீரி சம்பா விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு 100000 ரூபாய் அபராதம்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விற்பனை விலையை விட அதிக விலையில் கீரி சம்பா அரிசியை விற்றதற்காக பாணந்துறை மற்றும் களுத்துறையில் உள்ள இரண்டு கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் தலா ரூ. 100,000 அபராதம் விதித்துள்ளது.

பாணந்துறையின் சரிக்கன்முல்ல பகுதியில் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை 300 ரூபாய்க்கு விற்ற கடை உரிமையாளருக்கும், களுத்துறையின் நாகொட பகுதியில் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை ரூ. 310 விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், கட்டுப்பாட்டு விலையில் கீரி சம்பா அரிசியை விற்காமல் பதுக்கி வைத்த ஹொரணையின் போருவதண்ட பகுதியில் உள்ள கடை உரிமையாளருக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடை உரிமையாளர் வைத்திருந்த 5 கிலோகிராம் கீரி சம்பா அடங்கிய 25 பொதிகளையும் கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )