
வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கெப்ரக வாகனம்
மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து நேற்று (04) விபத்துக்குள்ளாகியது.
குறித்த கெப் ரக வாகனம் மண் திட்டில் சரிந்து நின்றதால் எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லை என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப் பகுதியில் அதிகளவான பனி மூட்டம் காணப்படுவதால் இந்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி சென்று உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

