
நாரம்மல – குருநாகல் பிரதான வீதியில் விபத்து ; மூவர் பலி
நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று(05) லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்திற்கு சென்று கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த, 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

