யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது

ஏழாலை கிழக்கு பகுதியில் நேற்று (04) இரவு வாணிப நிலையத்திற்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளார்கள் அப்போது கடை உரிமையாளர் மிக்சர்க்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது மிக்ஸர் வாங்க வந்தவர்கள் கடை உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிங்காராவேல் தானவன் வயது 35 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இந்த சம்பவப் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )