
பாடசாலைகளுக்கிடையிலான சமத்துவமின்மையைக் குறைத்து பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவங்களின் தரத்தை மேம்படுத்துவதே இந்த கல்வி சீர்திருத்தத்தின் முதன்மை நோக்கம்
இலங்கை கல்வித்துறை பல தசாப்தங்களாக எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பாடசாலைக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளில் காணப்படும் சமத்துவமின்மை, பிள்ளைகளின் கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் பாரிய பிரச்சினைகள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
போட்டித் தன்மை மிக்க கல்வித்துறையில் பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், அதிபர்கள் முகங்களுக்கும் சிக்கல்கள் இவை அனைத்திற்கும் அடிப்படையாக காணப்படுவது பாடசாலைகளின் சமத்துவமின்மை.
அதனைத் தவிர்ப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பல பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சமத்துவமின்மையை குறைப்பதே கல்வி மறுசீரமைப்பின் அடிப்படை நோக்கமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அவ்வாறே பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி அனுபவத்தை உயர்தரத்துடன் வழங்கும் நோக்கிலும், பாடசாலைகளின் பெயரை விட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் தரத்தை உயர்தரத்தில் பேணுதல் முதன்மையானதாகும்.
கல்விச் செயற்பாட்டின் தரத்தை உயர்த்தும் அதிபர்களின் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு, தலைமைத்துவம், முன்னுதாரணம் மற்றும் ஒத்துழைப்பு என்பன அடிப்படையில் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய கல்வி அமைச்சர்; கல்வி மறுசீரமைப்பில் பாடவிதானங்களை மாற்றுதல், மாத்திரமன்றி ஆளணி வளத்தை முன்னேற்றுதல், நிர்வாகத்தை முன்னேற்றுதல், உட்கட்டமைப்பு வசதிகளை சமமாகப் பகிர்ந்தளித்தல் மற்றும் கல்வி செயற்பாட்டை டிஜிட்டல் மயப்படுத்துதல் போன்ற துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கல்வி மறு சீரமைப்பு திட்டமிடப்பட்டதாகவும் முறையானதாகவும் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கான பதில்களைத் தேடி அவற்றை இற்றைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளும் இடம்பெறுவதாகவும், நாம் இலக்குடனும் நோக்குடனும் மூன்று வருடங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து, பின்னர் வினைத்திறன் மிக்க முறையான நிர்வாக மறுசீரமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல், நவீனமயப்படுத்தல் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
பிள்ளைகளின் அனுபவத்தில் தரத்தை ஏற்படுத்துவதற்காக வகுப்பறை வசதிகளை அதிகரித்தல் மற்றும் பிள்ளைகளின் எண்ணிக்கையை வரையறுக்கும் போது விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப வகுப்புகளில் 40 பிள்ளைகள் மற்றும் இடைநிலை வகுப்புகளில் 45 பிள்ளைகள் வரையும் வரையறுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்விக் கட்டமைப்பின் பரீட்சைகளைப் பதிவு செய்யும் நிறுவனம் மாத்திரமன்றி பிள்ளைகளின் அனுபவம் மற்றும் தரமான கல்வியை வழங்கும் மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கும் தான் அதிகம் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்
இந்தக் கட்டமைப்பில் பெற்றோர்களின் மற்றும் பிரஜைகளின் பங்களிப்பு அத்தியாவசியம் என்றும், இது சவால் மிக்கதாயினும் ஒற்றுமையான தேசமென்றாக முன்னேறிச் செல்ல வேண்டிய பயணம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

