நுகேகொடையில் நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் ; ஏழு பேர் கைது

நுகேகொடையில் நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் ; ஏழு பேர் கைது

நுகேகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குழு ஒன்று, ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, ​​குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )