2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களையும் உற்பத்தித்திறன் கொண்ட கிராமங்களாக மாற்றுவதே நோக்கம்

2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களையும் உற்பத்தித்திறன் கொண்ட கிராமங்களாக மாற்றுவதே நோக்கம்

2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் உள்ள அனைத்து கிராமங்களையும் உற்பத்தித்திறன் கொண்ட கிராமங்களாக மாற்றுவதே தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் நோக்கம் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் உச்சி மாநாட்டில் விசேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் விஷன் 2025 திட்டத்தின் ஆதரவுடன், நாட்டில் உள்ள அனைவருக்கும் புதுமை சார்ந்த உற்பத்தித்திறன் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் இந்த தேசிய உற்பத்தித்திறன் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது.

இந்த மாநாட்டின் மூலம், அக்டோபர் 2022 முதல் நவம்பர் 2025 வரை மூன்று ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்பட்ட பலதரப்பட்ட உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு திட்டங்களின் வெளியீடுகள் வெளியிடப்பட்டன, அந்த திட்டங்களின் வெளியீடுகள் குறித்து பங்குதாரர்களுக்கு தௌிவூட்டப்பட்டதுடன், அதற்கு பங்களித்த அனைவரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )