
இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் திஸ்ஸமகாராமையில் கைது
திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமகுலிய குளத்திற்கு அருகிலுள்ள ஒரு சாகுபடி நிலத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று காலை குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
அங்குள்ள களஞ்சிய அறை ஒன்றில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகள், T56 துப்பாக்கிக்கான 2 தோட்டாக்கள், 03 M ரக தோட்டாக்கள் 16 மற்றும் 03 HPMG தோட்டாக்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் திஸ்ஸமஹாராம, காவந்திஸ்ஸபுரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

