
முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மகாவலி அதிகாரசபையின் காணியில் கட்டப்பட்ட தமது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்தமைக்கு இழப்பீடாக 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை சட்டவிரோதமாக பெற்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்தை புரிந்தமை தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

