
பிரதமருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையே சந்திப்பு
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16) காலை டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், “இன்று காலை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை டெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

