
அநுராதபுரத்தில் விபத்து ; இருவர் பலி
அநுராதபுரம் – பாதெனிய வீதியில் ஏரியாகல பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது வேனில் சாரதியும் அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களும் காயமடைந்து தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

