
சீனாவில் கடலில் விழுந்த சரக்கு விமானம் ; 2 பேர் பலி
சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த போயிங் 747 சரக்கு விமானம் நேற்று தரையிறங்கும் போது , ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விமானம் முதலில் பயணிகள் விமானமாக இயக்கப்பட்டு தற்போது சரக்கு விமானமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES China

