
போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று (26) மாலை 04.15 மணிளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-315 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரிடமிருந்து 02 கிலோ 832 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3 கோடியே 40 லட்சம் பெறுமதியாகும்.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை இன்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
CATEGORIES Sri Lanka

