
போதைப்பொருளுடன் 8 பேர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாளில் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் போதை மாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் ஆறு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

